சூடான செய்திகள் 1

´இதயத்திற்கு இதயம்´ நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு 50 இலட்ச ரூபா நிதி

(UTV|COLOMBO) இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களுக்காக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ´இதயத்திற்கு இதயம்´ நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 50 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை வழங்கும் நிகழ்வு நேற்று (26) ஜனாதிபதி செயலத்தில் இடம்பெற்றது.

கடந்த 16 ஆம் திகதி ´இதயத்திற்கு இதயம்´ நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தினை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கமைய இந்த நிதி அன்பளிப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பௌத்த சங்கத்தின் பங்களிப்புடன் இந்த நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான காசோலை ஜனாதிபதி விசேட வைத்திய நிபுணர்கள் ருவன் ஏக்கநாயக்க மற்றும் ராஜித டி சில்வா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

 

 

 

 

 

Related posts

ஒரு தொகை போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

குளவி கொட்டுக்கு இலக்காகிய 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிய உபகுழு