வகைப்படுத்தப்படாத

இண்டர் நெட் சேவை 4 மணி நேரம் முடக்கம்

(UTV|INDIA)-ராஜஸ்தானில் அரசு பணிகளுக்கான தேர்வு நேற்று நடத்தப்பட்டது.

அதையொட்டி அங்கு செல்போன்களின் ‘இண்டர் நெட்’ சேவை 4 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்பட்டது. அரசு தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஜோத்பூர், அஜ்மீர், பரத்பூர் உள்ளிட்ட நகரங்களில் இண்டர் நெட் சேவை முடக்கம் அமலில் இருந்தது. இதனால் அங்குள்ள பொது மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இது போன்ற நடவடிக்கை ராஜஸ்தானில் புதிதல்ல. கடந்த 22 நாட்களில் 3-வது தடவையாக இண்டர் நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 26 தடவைகள் முடக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பொது மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் சேவையை ஊக்குவிக்கும் அரசே இத்தகையை நடவடிக்கையையும் மேற்கொண்டு தடையும் செய்கிறது என வருந்துகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Update – அனர்த்தங்களால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது…

පී. හැරිසන්ගේ සහ රංජිත් මද්දුමගේ අමාත්‍ය ධුර සංශෝධනයක්