கேளிக்கை

இணையதளத்தில் கசிந்த ‘காலா’ – வீடியோ இணைப்பு

(UDHAYAM, COLOMBO) – ரஜினி நடிக்கவிருக்கும் ‘காலா’ படத்தின் அறிமுக பாடல் இணையதளத்தில் கசிந்துள்ளது.

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிவரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

படப்பிடிப்பு தொடங்கியது முதல் இப்படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

இதை படக்குழுவினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் அறிமுக பாடல் 1 நிமிட வீடியோ தற்போது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.

இந்த பாடலில் ரஜினி பேசும் வசனமும் அடங்கியுள்ளது.

எதிரி ஒருவர் ‘டேய் காலா, உன் காலை எடுத்து வச்ச’ என்று கூற, அதற்கு ரஜினி, நான் காலை வைக்கிறதும், வைக்காததும், உன் தலை இருக்கிறதும் இல்லாததும் உன் கைலதாண்டா இருக்கு’ என்று வசனம் பேசுகிறார்.

அதேபோல், இந்த பாடலில் ‘கபாலி’ அறிமுக பாடலின் சாயலும் இருப்பதாகவே தெரிகிறது.

இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

படப்பிடிப்பு தொடங்கி 5 நாட்களே ஆகியுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த யாரோ ஒருவர்தான் இப்பாடல் காட்சியை படம்பிடித்து இணையதளத்தில் கசிய விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

ஹுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி, நானா படேகர் உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

[ot-video][/ot-video]

Related posts

மக்களை சிரிக்க வைத்த நடிகர் தவக்கலைக்கு சினிமாவே எமனான கதை

வைரலாகும் ‘அயலான்’

2018 இல் 171 தமிழ் படங்கள் ரிலீஸ்