உள்நாடு

இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.45 இற்கு பதுளை நோக்கி பயணிக்கும் 1001 என்ற இலக்கமுடைய ரயில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு கொழும்பு நோக்கி பயணிக்கும் 1002 இலக்கத்தையுடைய ரயில் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த ரயில்களில் ஆசன முன்பதிவுகளை செய்வதற்கான நடவடிக்கைகளை ரயில்வே திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் மத்தியவங்கி நடைமுறைப்படுத்தவுள்ள புதிய சட்டம்!

ஹட்டன் விபத்தில் இளைஞன் பரிதாபகரமாக பலி

கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்ய விரும்பவில்லை – கீதா குமாரசிங்க

editor