சூடான செய்திகள் 1

இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றிற்கு

(UTV|COLOMBO) – இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.

அதன்படி, அடுத்த வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் 30ம் திகதி வரை அரச செலவாக 1,474 பில்லியன் ரூபாவை இடைக்கால கணக்கறிக்கையில் உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் 10.30 முதல் மாலை 6.30 மணிவரை பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளதோடு, இதன்போது கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையில் ஏறி பெண் கைதிகள் ஆர்பாட்டம்

இன்று முதல் ஐந்தே நிமிடங்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி

இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு