உள்நாடு

இடைக்கால அரசின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை 11 கட்சிகள் புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என 11 கட்சிகளின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் முற்றாக இராஜினாமா செய்து இடைக்கால அரசாங்கமொன்றில் உண்மையான அக்கறையை காட்ட வேண்டும் என்ற போதிலும் ஜனாதிபதி நேற்று புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமித்துள்ள நிலையிலேயே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக 11 கட்சிகளும் தெரிவித்துள்ளன.

சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றது.

Related posts

தேசிய வீடமைப்பு அதிகார சபை – நால்வர் கைது

தடுப்பூசிகளை இந்த இடங்களில் இன்று பெற்றுக் கொள்ளலாம்

தமிழ் முற்போக்கு கூட்டணியும் சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது