உள்நாடு

”இடுகம’ நிதியத்தின் மீதி 1511 கோடியை தாண்டியது

(UTV|கொழும்பு)- தனிப்பட்ட நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1511 மில்லியனாக அதிகரித்துள்ளது.

சப்ரகமுவ மாகாண சபையின் அரச ஊழியர்கள் 17,504,709.35 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தனர். குறித்த அன்பளிப்பு சப்ரகமுவ மாகாண சபையின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ அவர்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,511,158,364.14 ரூபாவாகும்.

உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று

அவன்காட் தொடர்பில் சாட்சியமளிக்க 18 பேருக்கு ஆணைக்குழு அழைப்பு

நெல்லை உடனடியாக அரிசியாக மாற்ற அனுமதி