சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

(UTV|COLOMBO) மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

 
 
 
 

Related posts

தென்கொரியா எரிபொருள் களஞ்சியசாலை வெடிப்பு சம்பவம்-இலங்கையர் கைது

ஓகஸ்ட் மாதமளவில் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை

மலையக ரயில் போக்குவரத்து தாமதம்