உள்நாடு

இடியுடன் கூடிய மழை இன்று மேலும் அதிகரிக்க கூடும்

(UTV|கொழும்பு)- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில், இடியுடன் கூடிய மழை இன்று மேலும் அதிகரிக்க கூடும் என வளிமணடலவியல் திணைக்களம் இன்று வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 04 மாவட்டங்களில் மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, கொடக்காவில மற்றும் வெலிகேபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் களுத்துறை, மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலும் மண்சரிவு அனர்த்தம் ஏற்படக்கூடும் தெரிவிக்கப்படுகின்றன.

மாத்தறை, மாவட்டத்தில் பஸ்கொட மற்றும் கொடபொல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும்கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவிலும் மண்சரிவு அனர்த்தம் ஏற்படக்கூடும் என்று அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்த பிரதேசங்களில் நிலச்சரிவு, நில வெடிப்பு, பாறைகள் புரலுதல், நிலம் நிலம் தாழிறங்கல் போன்றவை தொடர்பில் முன்னெச்சரிகையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இந்தியா தூதுவருக்கு மனநல பிரச்சினை?

மற்றுமொரு ஹெரோய் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

யாழில் கரை ஒதுங்கிய மர்ம கப்பல்!