உள்நாடு

இசை நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பணி இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி காலிமுகத்திடலில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் கான்ஸ்டபிளை பணி இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொரலந்த பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் கடமையாற்றும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பில் நத்தார் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பாதுகாப்பிற்காக விசேட கடமைக்காக நியமிக்கப்பட்டிருந்த போது இரவு சிவில் உடையில் காலிமுகத்திடலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றுள்ளார்.

மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் குறித்த அதிகாரி, மேடையின் முன் நடனமாடி திடீரென இசைக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்த மேடைக்கு சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதேவேளை அவர் 50,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் அடுத்த வருடம் ஜனவரி 13 ஆம் திகதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘நெருப்பு வலய சூரிய கிரகணம்’ தென்படும் நேரங்கள்

சிங்கராஜ வனப்பகுதி – வீதி நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு உத்தரவு

உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு