சூடான செய்திகள் 1புகைப்படங்கள்விளையாட்டு

இங்லாந்தின் பல தசாப்த கால கனவு நிறைவேறியது (photos)

(UTVNEWS | COLOMBO) –  உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்ப்பில் ஹென்றி நிக்கோல்ஸ் 55 ஓட்டங்களையும், லத்தம் 47 ஓட்டங்களையும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்த வீச்சில் லியம் பிளன்கட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 242 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 241 ஓட்டங்களைப் பெற்றதில் போட்டி சமநிலை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் பெர்கசன் 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் நீஸாம் 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓட்டங்களை பெற, நியூஸிலாந்தின் வெற்றிக்கு 16 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

16 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணிக்கும் இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டம் என்ற நிலையானது எனினும் அந்தப் பந்தில் ஒரு ஓட்டம் மாட்டும் பெறப்பட, சூப்பர் ஓவர் விதிப்படி ஒரு அணி அதிகபடியான நான்கு ஓட்டங்களை பெற்ற அணிக்கே வெற்றி கிட்டும்.

அதன்படி இப் போட்டியில் இங்கிலாந்து அணியே அதிகபடியான நான்கு ஓட்டங்களை விளாசித் தள்ளியமையினால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத்தை கைப்பற்றி 44 வருடகால கிரிக்கெட் கனவை நனவாக்கியது.

அதன் அடிப்படையில் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று இம்முறை உலகக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

Related posts

பேரவாவி அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பிக்கத் தீர்மானம்

காலநிலையில் மாற்றம்

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றின் உத்தரவு