விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

(UTV |  லாகூர்) – பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்திருந்த. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றன. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5வது டி-20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலாவதாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து வீரர் மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், வில்லி மற்றும் சாம் குரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் டேவிட் மலான் 36 ரன்னும், கேப்டன் மொயின் அலி 51 ரன்னும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டி-20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இந்த தொடரில் தற்போது 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

Related posts

ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு மூன்று மாதங்கள் தடை