விளையாட்டு

இங்கிலாந்தை எதிர்கொண்டு அரையிறுதியில் கால்பதித்த அவுஸ்திரேலியா

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை குவித்தது.

286 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்டுக்களையும் 26 ஓட்டத்துக்குள் இழந்தது. முதலாவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் ஜேம்ஸ் வின்ஸ் டக்கவுட்டுடனும், 3.3 ஆவது ஓவரில் ரூட் 8 ஓட்டத்துடனும், 5.5 ஆவது ஓவரில் இயன் மோர்கன் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

4 ஆவது விக்கெட்டுக்காக பெயர்ஸ்டோவுடன் பட்லர் சற்று நேரம் தாக்குப் பிடித்து நின்றாட இங்கிலாந்து அணி 13 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 50 ஓட்டங்களை கடந்தது. இந் நிலையில் 13.5 ஆவது ஓவரில் பெயர்ஸ்டோ 27 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க மறுமுணையில் பட்லர் 27.2 ஆவது ஓவரில் ஸ்டோனிஸுடைய பந்து வீச்சில் கவாஜாவிடம் பிடிகொடுத்து 25 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (124-5).

அதனிடையே பெயர்ஸ்டோவின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய பென்ஸ்டோக்ஸ் மைதானத்தில் சற்று நேரம் தாக்குப் பிடித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனினும் அவர் 36 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் மொத்தமாக 115 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 8 நான்கு ஓட்டம் அடங்கலாக 89 ஓட்டத்துடன் ஸ்டார்க்குடைய பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

 

 

 

Related posts

கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா – அறிவிக்க மறுக்கும் நிர்வாகம்

IPL முதல் போட்டியில் வென்ற ரோயல் செலஞ்சர்ஸ்

சதம் அடித்து சச்சின் பட்டியலில் இணைந்த கோஹ்லி…