விளையாட்டு

இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் இல் விளையாட அனுமதி மறுக்க முடியாது

(UTV | கொழும்பு) – ஐபிஎல் போட்டி பிரபலமாக உள்ளதால் அதில் விளையாடக் கூடாது என்று இங்கிலாந்து வீரர்களுக்கு உத்தரவிட முடியாது என இங்கிலாந்து தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஜூன் மாதம் இங்கிலாந்தில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அனுமதி அளித்துள்ளது. இதுபற்றி இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் விளையாடக் கூடாது என்று வீரர்களுக்குக் கட்டளையிடுவது கடினமானதாகும். இதன் எண்ணிக்கையைப் பார்க்கும்போது வேண்டாம் எனச் சொல்ல முடியாது. டி20 கிரிக்கெட்டில் ஐபிஎல் ஒரு பிரபலமான போட்டியாகும். எனவே அதில் விளையாடக் கூடாது எனக் கூற முடியாது.

இது ஒரு பிரச்னையும் அல்ல. ஏனெனில் தரமான டி20 கிரிக்கெட்டை வீரர்கள் விளையாடுகிறார்கள். இது எங்களுக்கும் பயன் அளிக்கிறது. வீரர்களுக்கும் பேருதவியாக இருக்கிறது. போட்டிகளில் விளையாடுவது குறித்து சொந்தமாக வீரர்கள் முடிவெடுக்கிறார்கள். அவர்கள் விளையாடுவதால் நாங்கள் பலன் அடைகிறோம்.

இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதால் இங்கிலாந்து அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஐபிஎல் ஏலத்தில் மொயீன் அலி உள்பட இங்கிலாந்து வீரர்கள் தேர்வானால் மகிழ்ச்சியே. இதனால் இந்தியச் சூழல் பற்றி அவர்கள் கற்றறிந்து, ஒரு வீரராக முன்னேற்றம் அடைகிறார்கள் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உள்நாட்டு ரசிகர்களுக்கும் அனுமதி

ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்த பெலருஸ் பயிற்சியாளர்கள்

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் இன்று மருத்துவ பரிசோதனைக்கு