விளையாட்டு

இங்கிலாந்து வீரர்களின் சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்படும்

(UTV | இங்கிலாந்து ) – இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இனிவரும் காலங்களில் இணைத்துக் கொள்ளப்படும் வீரர்களின் சமூக வலைத்தளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் க்ராஹம் தோர்ப் (Graham Thorpe) இதனைத் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டுள்ள வேகப்பந்துவீச்சாளர் ஒலி ரொபின்சன், 2012 முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமது சமூகவலைத்தளங்களில் கடுமையான இனவாதக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கு ரொபின்சன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக வீரர்களது சமுக வலைத்தளங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என தோர்ப் கூறியுள்ளார்.

Related posts

இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை

அவுஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா

28 வருட வெற்றியினை விட்டுக்கொடுக்க தயாரில்லை