வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்து இளவரசர் பிலிப் நலமுடன் உள்ளார் – எட்வர்டு மருத்துவமனை

(UTV|ENGLAND)-இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (96). கடந்த சில வாரங்களாக இவர் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பிலிப் நேற்று கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இங்கிலாந்து இளவரசர் பிலிப்புக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் உள்ளார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரண்மனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடந்த சில தினங்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த இளவரசர் பிலிப்புக்கு இன்று இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் நலமுடன் உள்ளார். விரைவில் அரண்மனை திரும்புவார் என தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ජම්බුගස්මුල්ල ප්‍රදේශයේ වෙඩි තැබීමේ සිද්ධියට සැකකරුවෙක් අත්අඩංගුවට

ரதுபஸ்வல சம்பவம் – பிரிகேடியர் மீண்டும் விளக்கமறியலில்

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு