விளையாட்டு

இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களால் வெற்றி!

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ.சி மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 230 ஓட்டங்களையும் , இரண்டாவது இன்னிங்சில் 336 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் , 327 என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சை நேற்று ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது 4 விக்கட் இழப்பிற்கு 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து இன்று முற்பகல் தொடக்கம் இலங்கை அணியின் பின் வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர்.

எவ்வாறாயினும், மொஹீன் அலி மற்றும் ஜெக் லீச் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சில் 284 ஓட்டங்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 86 ஓட்டங்களையும் , ரொஷென் சில்வா 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மலிந்த புஸ்பகுமார ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் சிறப்பாக பிரகாசித்த மொஹீன் அலி மற்றும் ஜெக் லீச் தலா 4 விக்கட்டுக்கள் வீதம ்வீழ்த்தினர்.

அதன்படி , மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று 3-0 என்ற கணக்களில் தொடரை கைப்பற்றியுள்ளது.

 

 

 

 

Related posts

ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நமீபியா

ரஃபேல் நடால் 89 ஆவது பட்டத்தையும் தன்வசப்படுத்தினார்

இங்கிலாந்து அணிக்கு இமாலய வெற்றி