கிசு கிசுவிளையாட்டு

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்றதா? சர்ப்ராஸ் கருத்து

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்கவில்லை என்று பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமட் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை சிதைக்கும் வகையில் இந்திய அணி வேண்டுமென்றே இந்த போட்டியில்தோற்றதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஸ் அகமட்டிடம் கேட்ட போது, நாங்கள் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கக்கூடாது என்பதற்காக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோற்றதாக நான் நினைக்கவில்லை. அப்படி சொல்வது சரியானது அல்ல. இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. என்று தெரிவித்தார்.

Related posts

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு FCID யில் முறைப்பாடு-பொதுபலசேனா அமைப்பு

விலகும் தப்ராஸ் ஷம்ஸி

நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருட போட்டித் தடை