வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்தில் தீவிரவாதத் தாக்குதல் – பலர் பலி – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் குறைந்த பட்சம் 19 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்செஸ்டரில் உள்ள மண்டபம் ஒன்றில், பாடகி அரியானா க்ராண்டேயின் இசை நிகழ்சி ஒன்று இடம்பெற்று நிறைவடைந்தப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குண்டுவெடிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகின்ற போதும், இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

எனினும் இதனைத் தீவிரவாத் தாக்குதலாக கருதுவதாக இங்கிலாந்தின் வடமேற்கு தீவிரவாத முறியடிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[ot-video][/ot-video]

[ot-video][/ot-video]

Related posts

தரம் 1ல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப இறுதித் திகதி நீடிப்பு

சீனாவில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து

මුත්තයියා මුරලිදරන්ගේගේ ක්‍රිකට් දිවිය සිනමා නිර්මාණයකට