விளையாட்டு

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் மகன்

(UTV|COLOMBO)-நியூசிலாந்தில் அடுத்த மாதம் 13-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந்தேதி வரை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக்கின் மகனும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைமை நிர்வாகியாக இருக்கும் ஜேம்ஸ் சதர்லேண்டின் மகன் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

ஆஷஸ் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் சங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்துக்கு எதிராக 133 ரன்கள் குவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 17 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்டீவ் வாக்கின் மகன் ஆஸ்டின் வாக் சதம் அடித்திருந்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி

ஸ்மித், வோனர் இருவருக்கும் 1 வருட போட்டித்தடை

லசித் மாலிங்க, உள்வாங்கப்பட, இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு