உலகம்

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் – சிறுவன் பலி – 5 பேர் படுகாயம்

ஆஸ்திரியாவின் தென்பகுதி நகரமொன்றில் நபர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான்.

ஆஸ்திரியாவில் வசிப்பதற்கு சட்டபூர்வமான அனுமதியை பெற்ற சிரியாவை சேர்ந்தவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

விலாச் என்ற நகரில் 23 வயது நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பார்த்த வாகனச்சாரதி அந்த நபர் மீது வாகனத்தை செலுத்தி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆஸ்திரியாவில் வசிப்பதற்கு சட்டபூர்வமான அனுமதியை பெற்ற சிரியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அவுஸ்திரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை நடப்பதை உணவு விநியோகிப்பவர் ஒருவர் பார்த்துள்ளார் அவர் தனது வாகனத்தை சந்தேகநபரை நோக்கி செலுத்தியுள்ளார் இதன் காரணமாக மேலும் பலர் உயிரிழப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

14 முதல் 32 வயதானவர்கள் காயமடைந்துள்ளனர். வன்முறைக்கான காரணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

சந்தேநகநபரின் நோக்கம் குறித்து விசாரணைகைள மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாரஇறுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் இத்தாலி ஸலொவேனியா எல்லையில் உள்ள இந்த நகரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆஸ்திரியாவில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ம் ஆண்டு ஜிகாத் உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர்.

Related posts

துருக்கியில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 வருடங்களும் மனைவிக்கு 7 வருடங்களும் சிறைத்தண்டனை

editor

பாதாள உலகத்தவர்களை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம்