அரசியல்உள்நாடு

ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல தடை – கட்டாய உத்தவு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட விசேட சட்டமூலங்கள் நிறைவேற்றப்படும் போது ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் இவ்வாறான அறிவிப்புகளை வெளியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் எம்.பி.க்கள் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்படும்.

எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மீதான விவாதம் நடத்தப்பட்டு, அது தொடர்பான வாக்கெடுப்பு அன்று பிற்பகல் நடத்தப்பட உள்ளது. இந்த விவாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களின் பங்கேற்பு கட்டாயம் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, குறித்த பிரேரணையை ஏற்றுக் கொள்வதில்லை என சிறி லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

                 இவ்வாறன செய்திகளை அறிந்துகொள்ள எமது https://www.youtube.com/@UTVHDLK க்குச் சென்ற Subscribe செய்யுங்கள்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“இறக்குமதி தடை முழுமையாக நீக்கம்” நிதி இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதி, சீனாவிற்கு விஜயம்!

உத்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு – அரச ஓய்வூதியர்களின் தேசிய இயக்கம் இணக்கம்.