அரசியல்உள்நாடு

ஆளும் கட்சி எம்பி மோதல்- ஆரம்பிக்கப்பட்ட விசாரணை

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் பின்னர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக்க ராஜபக்ஷ ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான முரண்பாடு தொடர்பில் அங்கிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய கோட்டை பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற விரும்புவதாக நேற்று (05) பிற்பகல் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாராளுமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம, தனது தந்தையை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவின் மகன் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாக்குமூலத்தின் பின்னர் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related posts

நீர் வழங்கல் தொடர்பான பிரச்சிணை; தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம் ஜிப்ரி காலமானார்

தாம் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் கலாச்சார உரிமை சகலருக்கும் உண்டு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.