அரசியல்உள்நாடு

ஆளுங்கட்சி எம்.பி யின் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் – தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக எச்சரிக்கை

வனவிலங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாக சாடி, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்ய ஸ்ரீ ஹேரத்தின் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

பொலிஸாரின் தலையீட்டால் பதற்ற நிலைமை அங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

காட்டு யானைகளின் தொல்லையால் பாதிக்கப் பட்டுள்ள மக்கள் அதற்காக நட்டஈடு கோரியும் யானைகளிடமிருந்து பாதுகாப்பு கோரியும் நீண்ட காலம் வலியுறுத்தல்களை விடுத்தபோதும் அவை கணக்கிற் கொல்லப்படவில்லையென குற்றஞ்சாட்டுகின்றனர்.

திறப்பனே பிரதேச செயலாளர் அலுவலகம் முன்பாகவும் ஊர்மக்கள் முன்னதாக ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து மேற்படி எம்.பியின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

எவ்வாறாயினும் இந்த போராட்ட இடத்துக்கு விரைந்த பொலிஸார், ஆறு பேர் மட்டும் எம்.பியுடன் பேசுவதற்கு அனுமதி வழங்கினார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள ஊர்மக்கள், தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்

Related posts

LPL போட்டி வீரர்களுக்கான ஏலம் இன்று கொழும்பில்…!

சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை – அமைச்சர் விஜித ஹேரத்

editor

கோட்டாபயவை பிரதமராக்கவோ வேறு எந்தப் பதவிக்கும் நியமிப்பது பற்றியோ கலந்துரையாடவில்லை : ருவான்