உள்நாடு

ஆற்றில் விழுந்த லொறி – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி.

(UTV | கொழும்பு) –

பாதுக்கை மீபேயிலிருந்து கொழும்பு துறைமுகம் நோக்கி கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று குடைசாய்ந்துள்ளது.

ஹங்வெல்ல எபுல்கம சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டிப்பர் லொறி பாலமொன்றின் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு களனி ஆற்றின் கிளை ஆறொன்றில் குடைசாய்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் டிப்பர் லொறின் சாரதி உயிர்தப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திரையரங்குகளுக்கு பூட்டு

8,435 பேருக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

‘பாதுகாப்பிற்காக முன்னாள் பிரதமரை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றோம்’