அக்குரஸ்ஸ, மாரம்ப கால்பல வெல்பாலம் அருகிலுள்ள பக்மீகஹ பகுதியில் உள்ள படகு முனையம் அருகே, மனிதனின் கால் ஒன்று நில்வலா ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று (28) பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வெலிஹேன பிரதேசத்தில் 76 வயதுடைய ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக நேற்று பகல் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில் அதுதொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அகுரஸ்ஸ திடீர் மரண விசாரணை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், அகுரஸ்ஸ பொலிஸார் மனித இடது காலை மீட்டு, மாத்தறை பொது வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது ஒரு கொலையாக இருக்குமா அல்லது முதலை ஒன்றின் பிடியில் சிக்கி மீதமான கால் பகுதி ஆற்றில் மிதந்து வந்ததா என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன தனது சகோதரனின் கால் என மரணமடைந்தவரின் சகோதரர் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.