அரசியல்

ஆறு மாத காலப்பகுதியில் 129 பில்லியன் ரூபா கடனை செலுத்தியுள்ளோம்.

2024 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகள் ஊடாக பெற்றுக் கொண்ட கடன் பெறுமதியை காட்டிலும் 129 பில்லியன் ரூபா கடன் மீள் செலுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2024 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் பிணைமுறிகள் மற்றும் பிணைமுறி உண்டியல்கள் ஊடாக பெற்றுக்கொண்ட மொத்த கடன் ,  4852 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்ற நிலையில் அக்காலப்பகுதியில் 4981 பில்லியன் ரூபா கடன் மீள் செலுத்தப்பட்டுள்ளது.

பெற்றுக்கொண்ட கடன்களின் பெறுமதியை காட்டிலும் 129 பில்லியன் ரூபா பொருளாதார முன்னேற்றத்தின் ஊடாக மீள் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரச நிர்வாகத்தை முகாமைத்துவம் செய்துக் கொண்டு அரச முறை கடன்கள் கட்டம் கட்டமாக செலுத்தப்படுகிறது.

பொருளாதார பாதிப்புக்கு முன்னர் மத்திய வங்கியின் ஊடாக தேவையான நாணயத்தை அச்சிடும் வசதி அரசாங்கத்துக்கு காணப்பட்டது. இதனால் பணவீக்கம் 70 சதவீதமாக உயர்வடைந்தது.

புதிய மத்திய வங்கி சட்டம் இயற்றப்பட்டதால் நாணயம் அச்சிடல் வரையறுக்கப்பட்டது. இதனால் பணவீக்கம் குறைவடைந்துள்ளது.

மறுபுறம் சிறந்த மறுசீரமைப்புக்களை முன்னெடுத்துள்ளதால் சாதாரன முறைமையில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்தது.இதனால் கடன் பெறவும், பெற்றுக்கொண்ட கடன்களை மீள் செலுத்தவும் முடிந்துள்ளது என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

சிங்கப்பூருக்கு பறக்கும் அமைச்சர் அலி சப்ரி.

தேவையான திட்டங்களை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் விஜயதாச அறிவிப்பு.