கிசு கிசு

ஆறு மாதத்தினுள் ஷவேந்திரா சில்வாவினால் இராணுவத்தில் 17,000 பேருக்கு பதவி உயர்வுகள்

(UTV | கொழும்பு) – இராணுவத் தளபதியின் ஆலோசனைக்கு அமைய கடந்த ஆறு மாத காலப்பகுதியில் இராணுவத்தில் சுமார் 17,000 பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களில் குறித்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பணிப்பின் பேரில் ஆயுதப்படைகளின் தளபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இராணுவ அதிகாரிகள் 313 பேருக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அக்கால கட்டத்தில் மேலும் 2,402 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு வழங்கப்பட்ட 313 இராணுவ வீரர்களில் பிரிகேடியர்கள் 29 பேர் மேஜர் ஜெனரல் பதவிக்கும், கேர்னல் அதிகாரிகள் 51பேர் பிரிகேடியர்கள் பதவிக்கும், லெப்டினன்ட் கேர்னல் அதிகாரிகள் 95 பேருக்கு கேர்னல் பதவிக்கும், மேஜர் அதிகாரிகள் 138 பேருக்கு லெப்டினன்ட் கேர்னல் பதவிக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பசில் – ரணில் இடையே இன்று முக்கிய சந்திப்பு

இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் உறுதி

துருக்கியில் அதிவேக ரயில் விபத்தில் 9 பேர் பலி- 47 பேர் காயம்