கேளிக்கை

ஆறு ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த நஸ்ரியா

(UTV|இந்தியா) – நடிகை நஸ்ரியா, 6 ஆண்டுகளுக்கு பின் தன் கணவர் பகத் பாசிலுடன் இணைந்து திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட படங்களில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. குறிப்பாக மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் மற்றும் ஓம் சாந்தி ஓசானா ஆகிய படங்கள் நஸ்ரியாவுக்குள் இருந்த குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியது. கிட்டத்தட்ட அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதற்கு முன்பு நடித்த அனைத்து படங்களிலுமே ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது கணவர் பகத் பாசில் ஜோடியாக மலையாளத்தில் உருவாகி வரும் டிரான்ஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார் நஸ்ரியா. இந்த படத்தை பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரங்கள் போல அல்லாமல் இந்த படத்தில் மிக வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் நஸ்ரியா. இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப்படம் திரைக்கு வருகிறது.

Image result for trance movie

Related posts

‘ப்ரின்ஸ்’ தீபாவளியன்று வெளியாகும்

இணையதளத்தில் கசிந்த ‘காலா’ – வீடியோ இணைப்பு

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் திகதி இதோ..