சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரையான வீதி மூடல்

(UTV|COLOMBO)-அரச நில அளவையாளர் சங்கம் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

நாட்டின் காணி அளவீட்டு நடவடிக்கைகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட, அரசாங்கம் தங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை பெற்று கொடுக்க வேண்டும் என வலியுத்தியுள்ளார்.

இல்லாவிடின் இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, வேதன பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து, பல்லைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்கிறது.

அந்த குழுவின் இணைத்தலைவர் எட்வட் மல்வத்தகே  தெரிவித்துள்ளார்.

தங்களது பிரச்சினைகள் தொடர்பில் தற்போது நிதியமைச்சில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலந்துரையாடலின் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு கூடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து கலந்துரையாடலில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என அந்த குழுவின் இணைத்தலைவர் எட்வட் மல்வத்தகே குறிப்பிட்டார்.

 


நில அளவைத் திணைக்கள ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

போதைப் பொருளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை

விமானப்படையின் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்