உள்நாடு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள்!

(UTV | கொழும்பு) –

களனி பல்கலைக்கழகத்தில் சுமார் 350 மாணவர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று இரவு பல்கலைக்கழகத்திற்கு அருகில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டு போராட்டத்தைக் கலைத்தனர்.

இந்த போராட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதி முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மதுபான கடைகளுக்கு பூட்டு

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

செவ்வாயன்று மதுபானக் கடைகள் மற்றும் சூதாட்ட விடுதிகளுக்கு பூட்டு