உள்நாடு

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இன்னும் சில மணி நேரம்

(UTV | கொழும்பு) – காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பிரதேசத்தில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கைகளை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது.

நேற்றுமுன்தினம் போலவே கோட்டை பொலிசார் அந்த இடத்தை பார்வையிட்டு ஆர்வலர்களுக்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன், நாட்டில் தற்போதுள்ள சட்டத்திற்கு அமைவாகவும், பொதுமக்களை ஒடுக்காத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் கோட்டை பொலிஸார் மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாரின் கவனயீர்ப்புக்கு இணங்க நேற்று ஒரு குழுவினர் போராட்டப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

ஆனால் வேறு சில கட்சிகள் அந்த இடத்தை விட்டு எந்த வகையிலும் வெளியேற மாட்டோம் என்று வலியுறுத்தின.

Related posts

காசா சிறுவர் நிதியத்திற்கு 127 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது!

சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

கல்முனை இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு-மக்கள் பாராட்டு