உலகம்விளையாட்டு

ஆர்ஜென்டினாவை வீழ்த்திய சவூதி அணியினருக்கு காத்திருந்த மகிழ்ச்சித் தகவல்

(UTV | ரியாத்) –     22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதி தொடரை வென்ற சவுதி அணியினருக்கும் அந்நாட்டின் மன்னர் அண்மையில் மகிழ்ச்சிகரமான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

அதன் படி குறித்த போட்டியில் விளையாடிய அக் குழுவில் உள்ள அனைவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்தத்தொடரில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின.  முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.  தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலித்திய சவுதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும் ,சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்..இதற்கு பின்னர் பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முடிவில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.
சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, கத்தாரில் இருந்து திரும்பி வந்தவுடன் குறித்த வீரர்களுக்கு கார் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்து உள்ளார்.

Related posts

ஒலிம்பிக் போட்டிகள் இரத்தாகாது

இலங்கை அணியை விமர்சிக்கும் பாகிஸ்தான் ரமீஸ் ராஜா

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு