விளையாட்டு

ஆர்ஜன்டினாவை வீழ்த்திய இந்தியா

(UTV|COLOMBO)-20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கிண்ண சர்வதேச கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

இதன் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஆர்ஜென்டினாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் 6 முறை உலக சாம்பியனான (20 வயதுக்கு உட்பட்டோர்) ஆர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்திய அணி தரப்பில் தீபக் தாங்ரி 4 ஆவது நிமிடத்திலும், அன்வர் அலி 68 அவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 54 ஆவது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஜாதவ் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் 10 வீரர்களுடன் விளையாடிய இந்திய அணி பெற்ற முன்னிலையை போராடி தக்க வைத்து கொண்டது.

மேற்கு ஆசிய கால்பந்து பெடரேஷன் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஆசிய சாம்பியன் ஈராக்கை சந்தித்தது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈராக்கை வீழ்த்தியது. கடைசி நிமிடத்தில் இந்திய வீரர் புவனேஷ் வெற்றிக்கான கோலை அடித்தார். ஈராக் அணியை இந்திய அணி தோற்கடித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

குமார் சங்ககாரவிற்கு கிடைத்துள்ள கௌரவம்

பராலிம்பிக்ஸ் போட்டிகளில் பிரியந்த ஹேரத்திற்கு தங்கப்பதக்கம்

தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை