கேளிக்கை

ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா

(UTV|INDIA)-ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள்.

இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார்.
அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர்.
இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் பேச்சு கிளம்பி உள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கடைசி விவசாயி

இப்படியா செய்வார் ரகுல் பிரீத் சிங்?

மேடையில் இருந்து திடீரென ரசிகர் கூட்டத்தின் மீது பாய்ந்து குதித்த பிரபல நடிகர்!