உள்நாடு

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது இம்முறை சாத்தியப்படாது

(UTV | கொழும்பு) –   க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது இம்முறை சாத்தியப்படாது என்ற வகையில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இம்மாதம் 7ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் பாடசாலை விவகார மேலதிகச் செயலாளர் இ.டபிள்யு.எல்.கே. எகொடவெல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அந்த காலப்பகுதியில் ஆரம்பப் பிரிவுகளுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மேற்படி பரீட்சைகள் நடைபெறும் காலத்தில் ஆரம்ப தரம் மற்றும் ஆரம்ப பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது எனவும், பரீட்சை சூழலை பேணுவதற்கு இடையூறான பாடசாலையாக இருந்தால் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளுக்கு விடுமுறை வழங்குவதற்கும், குறித்த பாடசாலைகளுக்கு உரிய பணியிடங்களை பரிந்துரைப்பதற்கும், கற்றல் முறைகளை மேற்கொள்வதற்கும் உள்ளூராட்சி கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சை கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பணிக்கமர்த்துமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், வலய மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி – டொலரின் பெறுமதியில் மாற்றம்!

லிட்ரோ இன்றும் இல்லை

சுனில் பெரேராவின் மனைவிக்கு கொரோனா