வகைப்படுத்தப்படாத

ஆயுதக் கிடங்கு வெடித்ததில் 16 பேர் உயிரிழப்பு…

(UTV|MIYANMAR) மியன்மாரின் ஆயுதக் கிடங்கொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

மியான்மரின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான் மாகாணம், மாங்மாவோ நகரில் வெடிமருந்து அடைத்து வைக்கும் கிடங்கு உள்ளது. இங்கு வெடிமருந்தை எடுத்துச் செல்வதற்காக 60 க்கும் மேற்பட்டோர் கிடங்கிற்கு வந்து, வெடிமருந்தை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் கிடங்கிற்குள் இருந்த அனைவரும் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதில் 16 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், மேலும் 48 பேர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

 

 

 

 

Related posts

எய்ட்ஸ் நோய் – ஒரு வருடத்தில் 140 பேர் பாதிப்பு

Kim Kardashian West drops Kimono brand name

காரைநகர் பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்!