உள்நாடுவணிகம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகள் சிலவற்றில் பங்குபற்றிய ஏனைய தரப்பினரான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஏனையோருக்கான PCR முடிவுகள் இதுவரை வெளிவராத நிலையில், இன்றைய தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்வதைத் தவிர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தையை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பதுளையில் கோர விபத்து – ஒருவர் பலி

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!