வகைப்படுத்தப்படாத

ஆயிரத்து 994 முப்படை வீரர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – பொது மன்னிப்பு காலத்தில் முப்படையில் சரணடையாத 41 ஆயிரம் உறுப்பினர்களில் ஆயிரத்து 994 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஆயிரத்து 570 பேர் இராணுவ வீரர்கள் என்பதுடன், அதில் 3 பேர் இராணுவ அதிகாரிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் 393 பேர் கடற்படை வீரர்களுடன், 31 பேர் விமானப் படை வீரர்கள் எனவும் இராணுவ பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 6 மாதத்திற்கு மேலாக இராணுவ சேவையை கைவிட்டு சென்றுள்ள நிலையில், சேவையை கைவிட்டு சென்றமையை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Rishad says “Muslim Ministers in no hurry to return”

சீனாவில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு கைது..