உலகம்

ஆப்கானிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|ஆப்கானிஸ்தான்) – ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய வௌ்ளத்தில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானுன் பர்வான் மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

வௌ்ளத்தினால் கிட்டத்தட்ட 500 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் இடர்முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வீடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீன நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா!

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி

டிக்டாக் மீதான தடையை நீக்க அனுமதி