வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் மீது அரசுப்படை நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரிகள் 3 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், அமைச்சகத்தில் இருந்து வெளிவரும் அதிகாரிகளை குறிவைத்து இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,ம் இதில் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

லிபியா சிறை மோதல் – 39 பேர் பலி

Premier says he is opposed to capital punishment

Ireland bowled out for 38 as England surge to victory