வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஆப்கானிஸ்தானில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிதானின் தெற்கு பகுதியான கலாட்டில் உள்ள மருத்துவமனையில் தலிபான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த குண்டுவெடிப்பில் மருத்துவமனையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா வெளிநாடு செல்லத் தடை

சைட்டம் எதிர்ப்பு பேரணிக்கு தடைகோரிய மனு நிராகரிப்பு

தொடருந்தில் மோதி ஒருவர் பலி