விளையாட்டு

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து…

(UTV|COLOMBO)  ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 24 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை மான்செஸ்டரில் 3.00 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களை குவித்தது.

மேற்படி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணியக்கப்பட்ட 50 ஓவரின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 150 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஹஷ்மதுல்லா ஷாஹிடி 76 ஓட்டத்தையும் ரஹ்மத் ஷா 46 ஓட்டத்தையும், அஸ்கர் ஆப்கான் 44 ஓட்டத்தையும், குல்பாடின் நைய்ப் 37 ஓட்டத்தையும், நஜிபுல்லா ஸத்ரான் 15 ஓட்டத்தையும் மொஹமட் நபி 9 ஓட்டத்தையும், ரஷித் கான் 8 ஓட்டத்யைும் பெற்று ஆட்டமிழந்ததுடன் இக்ரம் அலி கில் 3 ஓட்டத்துடனும் டூவ்லத் சத்ரான் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷித் மற்றும் ஜோப்ர ஆச்சர் தலா 3 விக்கெட்டுக்களையும், மார்க்வூட் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

 

Related posts

முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி உதவி இடைநிறுத்தம்

editor