கேளிக்கை

ஆபாச வசனம் பேசியது ஏன்?

(UTV|INDIA)-ஜெயம், அந்நியன், பிரியசகி போன்ற படங்களில் நடித்திருக்கும் சதா நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘டார்ச்லைட்’ படத்தில் நடிக்கிறார். மஜீத் இயக்குகிறார். மீண்டும் தமிழில் நடிப்பதுபற்றி சதா கூறியதாவது: ஜெயம் படத்தில் கிராமத்து பெண்ணாக அறிமுகமாகி நடித்துவிட்டு மும்பை சென்றுவிட்டேன். அப்படத்தின் மூலம் எனக்கு கிடைத்த வரவேற்பு பற்றி யாரும் என்னிடம் சொல்லவில்லை. உடனடியாக வர்ணஜாலம், அந்நியன் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அப்படத்தில் என்னை கிளாமர் தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இது எனக்கு பிளஸ் ஆக இருந்ததா இல்லையா என்பதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால் எந்த கதாபாத்திரமும் ஏற்று நடிக்க வேண்டும் என்பதுதான் எந்தவொரு நடிகைக்கும் குறிக்கோளாக இருக்கும். அப்படித்தான் நான் எனது கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன். படம் வெற்றி பெற்றும் எனக்கு அதிக பட வாய்ப்புகள் வரவில்லையே என்கிறார்கள்.

அதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும், சதாவுக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்று இயக்குனர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். டார்ச்லைட் படத்தில் நெடுஞ்சாலைகளில் நின்று விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணாக நடித்திருக்கிறேன். பல நடிகைகளிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டு அவர்கள் மறுத்திருக்கிறார்கள். என்னிடம் இயக்குனர் கூறியபோது முதலில் நானும் மறுத்தேன். முதலில் கதையை கேளுங்கள் என்றார். கதை கேட்டவுடன் நான் அழுதுவிட்டேன்.

பிறகு 3 முறை அக்கதையை கேட்டேன். ஒவ்வொரு முறையும் என் கண்கள் கலங்கியது. இதில் ஆபாசமாக வசனம் பேசி நடித்திருப்பதாக டிரெய்லர் பார்த்தவர்கள் கேட்கிறார்கள். அந்த கதாபாத்திரம் என்ன பேசவேண்டுமோ அதைத்தான் நான் பேசி இருக்கிறேன். அதை எப்படி ஆபாசம் என்று கூறமுடியும். கிராமத்து பெண் வேடம் வந்தால் நடிப்பீர்களா என்கிறார்கள். முதலில் எனக்கு பெயர் வாங்கித்தந்ததே அதுபோன்ற பாத்திரம்தான். நிச்சயமாக கிராமத்து பெண் வேடம் ஏற்று நடிப்பேன். இவ்வாறு சதா கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மெகா ஸ்டாருக்கு தங்கச்சி ஆகப்போகும் ரவுடி பேபி?

காதல் கணவர் இரண்டாவது திருமணம்:கதறி அழுத பிரபல நடிகை!!

பிரபல நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில்!