கேளிக்கை

ஆபாச பட நடிகை மரணத்தில் மர்மம்

(UTV |  லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா) – அமெரிக்காவை சேர்ந்த நடிகை டகோடா ஸ்கை, ஆபாச படங்களில் நடித்து பிரபலமானார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொலிசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். டகோடா ஸ்கை மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர் என்று தெரிய வந்துள்ளது.

அண்மையில் டகோடாவின் தாத்தாவும், பாட்டியும் கொரோனா பாதிப்பினால் இறந்துள்ளனர். அதன்பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நடிகை டகோடா ஸ்கை, பொலிசாரால் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு ஓவியத்தின் முன்னால், கடந்த மே மாதம் ஆடையில்லாமல் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹரிஷ் கல்யாண் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்

ஒரு சில கருப்பு ஆடுகளால்தான் அந்த பிரச்சனை ஏற்படுகிறது…

இணையத்தில் வைரலாகும் அந்த ட்விட்?…