சூடான செய்திகள் 1

ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்று

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பில் கலந்து ஆலோசிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஷேட கலந்துரையாடல் இன்று(23) இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்தார்.

இன்றைய கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் சிறந்ததொரு வேலைத்திட்டம் அறிமுகம்

விமானப்படையின் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

தடை செய்யப்பட்ட பொலிதீன் உற்பத்தியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை