உள்நாடு

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு புதிய அதிகாரி

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவி செப்டம்பர் 24 ஆம் திகதி முதல் வெற்றிடமாக உள்ளது.

இதன்படி, தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றும் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவியில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியாவார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Related posts

நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்

editor

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பெண்கள்!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு இன்று