விளையாட்டு

ஆட்ட நிர்ணய விசாரணைகளுக்கு உபுல் தரங்கவுக்கும் அழைப்பு

(UTV | கொழும்பு) – கடந்த 2011ம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ண இறுதி போட்டியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சின் சிறப்பு விசாரணை பிரிவு உபுல் தரங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, இன்று(01) காலை 9 மணிக்கு விசாரணை பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ம் திகதி விளையாட்டு அமைச்சின் சிறப்பு விசாரணை பிரிவு மஹிந்தானந்த அலுளுத்கமகேயிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில், அப்போது தெரிவுக்குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா விளையாட்டு அமைச்சின் சிறப்பு புலனாய்வு பிரிவில் நேற்று(30) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

2011ம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலக கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றிருந்ததாக அப்போதைய விளையாட்டு துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே சர்ச்சைக்குரிய கருத்தினை அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட்டம்

இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017