உள்நாடு

ஆடைத் தொழிற்துறைக்கு விசேட வரிச்சலுகை

(UTV | கொழும்பு) –  ஆடைத் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்கப்படும்.

கச்சாப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் நாட்டில் நிலவும் பாதகமான பொருளாதாரச் சூழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஆடைத் தொழில்துறைக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கைத்தொழில் அமைச்சர் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக ஆடைத் தொழில்துறை மாறியுள்ளது.

Related posts

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் எவ்விதம் பாதிப்பும் இல்லை – மஹிந்தானந்தா

முன்னாள் அமைச்சர்களுக்கு பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் உட்பட 9 பேர் காயம்