உலகம்

ஆடத் தெரிந்தவன் கையில் ஆட்சி : புதுவித பிரச்சாரத்தில் ட்ரம்ப்

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 3ம் திகதி நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பையும் மீறி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனும் மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்பும் பரபரப்பாக தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த ட்ரம்ப் மீண்டும் தனது பிரச்சார பணிகளை துவங்கியுள்ளார். இந்நிலையில் ஒஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்வாண்டான் என்ற இடத்தில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் வாக்கு சேகரிப்பை நடத்தி வந்தார்.

அப்போது பாடல் ஒன்று இசைக்கப்பட்டதும் கையை தட்டிக்கொண்டு சில மெல்லிய நடன அசைவுகளை தனது ஆதரவாளர்களுக்காக போட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்ததோடு இந்த வீடியோ வைரலாகியும் வருகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமெரிக்கா துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தேர்வு

பாலியல் வழக்கில் சிக்கிய தனுஷ்கவுக்கு எதிரான பிணை தளர்வு!

சூயஸ் கால்வாயில் போக்குவரத்து வழமைக்கு